Friday, November 12, 2010

நண்பேண்டா - பாகம் 2

 அனைவருக்கும் வணக்கம் ...

எல்லோரும் தீபாவளியை குதுகலமாக கொண்டாடி இருப்பீர்கள்...தீபாவளி வந்ததும், போனதும் தெரியாமல் சென்றிருக்கும்...

நான் மீண்டும் மீண்டும் டார்ட்டாய்ஸ்  கொசுவர்த்தி  சுத்த வந்துள்ளேன்

நான் இந்த பாகம் இரண்டில் சொல்ல போவது என்னுடைய இளங்கலைக் கல்லூரி சீனியர் ஒருவரின் கதை, அவர் என்னிடம் அவரது பெயரை வெளியிட வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டதால் பெயரை வெளியிடவில்லை :-).


நண்பர்  கர்நாடக சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர், அதிலும் மிருதங்கத்தில்  கலக்குவார்... நான் படித்தது எல்லாமே மதுரை தான கல்லூரியின் பெயரும் அதுவே... கல்லூரி நாட்களில் நான் படிப்பதை விட Extra Curricular activity இல் மிகவும் ஈடுபாடு  கொண்டவன்...  என் நண்பரான இவரும் அதே மாதிரி தான, அவருக்கும் எனக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால், இவர் கொஞ்சம் பொய் அதிகமாக பேசுவார்... :P
 
 நானும் இவரும் ஒரே இசை கல்லூரியில் தான இசையும் பயின்றோம் ஒரு வருடம், மாலை நேர இசைக் கல்லூரி அது. கல்லூரிகளுக்கு  இடையில் நடக்கும் நிறையப்  போட்டிகளுக்கு இருவரும் சென்றுள்ளோம்... பரிசுகளும் வென்றுள்ளோம் ..

இது அனைத்தும் கல்லூரியில் பயின்ற காலத்தில மட்டுமே கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் தொடர்பும் அற்றுப் போனது...


மீண்டும் அவரை நான் சந்தித்தது கோபென்ஹேகனில்  ... இரண்டு வருடத்திற்கு முன், அலுவலகத்தில், நான் மதியம் உணவருந்த கீழே வந்தேன், அப்போது எனது சக பணியாளர்களும் அங்கே வந்திருந்தனர்.. அந்த அலுவலகத்தில் பணிப்  புரிவோருக்கு மதிய உணவு அங்கேயே கொடுக்கப்படும் ... அவ்வங்கியின் இன்னொரு கிளை எதிர் கட்டிடத்தில் உள்ளது... ஆகவே மதியம் உணவருந்த அனைவரும் இங்கே வருவர்...

அப்போது இந்த நண்பரும் அங்கே உணவருந்தி கொண்டு இருந்தார். நான் இவர் தான என்று முதல் பார்வையிலே அனுமானித்திருந்தாலும், அவரிடம் இருந்து ஏதும் ஒப்புதல் கிடைக்காததினால் ஆழ்ந்த யோசனையில் உணவருந்தி கொண்டு இருந்தேன் ...அவர் உணவருந்தி விட்டு சென்று விட்டார்... நானும் மாடிக்கு வந்துக்கொண்டிருக்கும் போது அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார் .. இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு என் பணிக்கு திரும்பி விட்டேன் .. பின்னர் மாலையில் சிறிது நேரம் பழைய கல்லூரி மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டோம்.

நான் இருந்த அதே apartment கே  இவரும் குடிப்புகுந்தார் ... வார இறுதி நாட்களில் இவருடன் சேர்ந்து ஊர் சுற்ற கிளம்பினோம்.. பொதுவாக எல்லா ஐரோப்பா நாடுகளிலும்  walking street எனப்படும் தெருக்கள் இருக்கும் ... எப்படி என்றால் , சென்னையின் ரங்கநாதர் தெருப் போன்று.. ஆனால் ஒரே வித்தியாசம் இங்கு அவ்வளவு இட நெருக்கடியெல்லாம் இருக்காது .. நிம்மதியாக நடக்கலாம் ...


இங்கு துணிக்கடை, ஹோட்டல் , மற்றும் சில கடைகள் இருக்கும் ... இன்னொரு வித்தியாசம் ரங்கநாதர் தெருவில் விலை கொஞ்சம் மலிவாக இருக்கும், அனால் இங்கோ விலையை கேட்டால் நமக்கு தலையை சுற்றும் ...

இங்கே இந்த வேடிக்கை காண்பிப்போர், வித்தைகள் செய்வோர் என்று வார இறுதி நாட்களில் நன்றாக இருக்கும், இதே தெருவில் நம்ம ஊர் பிதாமகன் சூர்யா போன்றோரும் உண்டு ...



இந்த தாயம் உருட்டுவது, இரண்டு குவளைக்குள் சிறுப் பந்தை  உருட்டுவது என்றுப் பல நடக்கும்... இவை அனைத்தும் சட்டப்படி செல்லாதது.. நம்ம ஊரை போன்று, அதாவது சட்டம் மட்டும் உண்டு இது போன்ற விஷயங்களில் ... பிதாமகன் படத்திற்கும் இந்த சம்பவத்திற்கும்   ஏறக்குறைய வித்தியாசங்கள் பெரிதாக கிடையாது ,
அங்கே லைலாவிற்குப் பதிலாக இங்கு எனது நண்பர், மதுபாலா, லொடுக்குப் பாண்டிக்குப் பதிலாக இரண்டுப்  பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ... விளையாடி முடிக்கும் வரை அவர்கள் எல்லாரும் ஒரே குழு என்பது உங்கள் மூளைக்கு உரைக்கவே உரைக்காது...

எனது நண்பரும் சும்மா இல்லாமல் இந்த கோஷ்டியில் ஆட முடிவெடுத்துவிட்டார் .. இவரோ ஊருக்கு புதிது, எங்கே என்னை கேட்டா எல்லாம் நடக்கிறது,
அவர் கூட்டத்தினுல்லே  உள்ளே புகுந்து ஆ இந்த 100 Euro இந்தக்  குப்பிக்குள் தான் இருக்கிறது என்று என்னை பார்த்து பெருமிதமாக ஒரு புன்னகையும் உதிர்த்து, குப்பியை திறந்து பார்த்தால் அதனுள்ளே ஒன்றும் இல்லை... என்ன பிதாமகன் படத்தில் லைலாவை இன்னும் காசை வெளியே எடுக்க முதலில் லைலாவை ஜெயிக்க வைப்பார், சூர்யா ... இங்கே அப்படியே தலைகீழ் ....

நான் வாயாப் போனது போகட்டும் வந்து தொலையா அப்படின்னு  இவர கூப்பிட்டால்  பக்கத்துல இருக்கிற அம்மிணி அதெல்லாம் வேண்டாம் இன்னொரு முறை விளையாடு விட்டதை பிடித்துவிடலாம் என்று கூற நாம்ம ஆள் உடனே இன்னொரு 50 euro வை எடுத்து வைத்து விட்டார்.. அங்கே வெளியே எடுத்த ரூபாயை நீங்கள் திரும்ப எடுக்கவே முடியாது... இப்போதும் பந்தை உருட்ட அதுவும் ஈ என்று இளித்தது ...

போனது 150 euro ...  நம்ம ஊர் மதிப்பில் 12000 சொச்சம்... நான் அவரை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வருவதற்குள் ... அப்பா முடியலை.... வெளியே  வந்த பின் தான், தான் இழந்தது 150 kroner illai 150 Euro என்பது அவருக்கு உரைத்தது .... அதன் பின் அவர் ஒரு வாரம் சரியாக உறங்கவில்லை தூங்கவில்லை ...

ஏமாற்றுவோர் நம்ம ஊரில் மட்டும் இல்லை உலகத்தில் எல்லா மூலைகளிலும் உள்ளனர் ...  ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்க தானே செய்வர் ...

8 comments:

எல் கே said...

ஹஹா நல்லா இருக்கு உங்க நண்பரோட அனுபவம் டேய் காசை விட்டது நீதான. உண்மைய சொல்லு

BalajiVenkat said...

LK .... Nijama naan vidala... Avar thaan vittar...

geethasmbsvm6 said...

இனவருந்த =உணவருந்த, லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே.

BalajiVenkat said...

Geetha patti ... nanri hai... i have corrected the spelling ... :P

but missing ur Trademark....

geethasmbsvm6 said...

grrrrrrrrrrrrrrrrrrrr OK????

அருண் பிரசாத் said...

உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html

நன்றி

எஸ்.கே said...

இது போன்ற ஏமாற்று அனுபவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது!

BalajiVenkat said...

@அருண் பிரசாத்

Nanri ...

@எஸ்.கே said...

emarubhavan irukum varai ematrubhavan irundhu kondu thaan iruppan...