Friday, November 12, 2010

நண்பேண்டா - பாகம் 2

 அனைவருக்கும் வணக்கம் ...

எல்லோரும் தீபாவளியை குதுகலமாக கொண்டாடி இருப்பீர்கள்...தீபாவளி வந்ததும், போனதும் தெரியாமல் சென்றிருக்கும்...

நான் மீண்டும் மீண்டும் டார்ட்டாய்ஸ்  கொசுவர்த்தி  சுத்த வந்துள்ளேன்

நான் இந்த பாகம் இரண்டில் சொல்ல போவது என்னுடைய இளங்கலைக் கல்லூரி சீனியர் ஒருவரின் கதை, அவர் என்னிடம் அவரது பெயரை வெளியிட வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டதால் பெயரை வெளியிடவில்லை :-).


நண்பர்  கர்நாடக சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர், அதிலும் மிருதங்கத்தில்  கலக்குவார்... நான் படித்தது எல்லாமே மதுரை தான கல்லூரியின் பெயரும் அதுவே... கல்லூரி நாட்களில் நான் படிப்பதை விட Extra Curricular activity இல் மிகவும் ஈடுபாடு  கொண்டவன்...  என் நண்பரான இவரும் அதே மாதிரி தான, அவருக்கும் எனக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால், இவர் கொஞ்சம் பொய் அதிகமாக பேசுவார்... :P
 
 நானும் இவரும் ஒரே இசை கல்லூரியில் தான இசையும் பயின்றோம் ஒரு வருடம், மாலை நேர இசைக் கல்லூரி அது. கல்லூரிகளுக்கு  இடையில் நடக்கும் நிறையப்  போட்டிகளுக்கு இருவரும் சென்றுள்ளோம்... பரிசுகளும் வென்றுள்ளோம் ..

இது அனைத்தும் கல்லூரியில் பயின்ற காலத்தில மட்டுமே கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் தொடர்பும் அற்றுப் போனது...


மீண்டும் அவரை நான் சந்தித்தது கோபென்ஹேகனில்  ... இரண்டு வருடத்திற்கு முன், அலுவலகத்தில், நான் மதியம் உணவருந்த கீழே வந்தேன், அப்போது எனது சக பணியாளர்களும் அங்கே வந்திருந்தனர்.. அந்த அலுவலகத்தில் பணிப்  புரிவோருக்கு மதிய உணவு அங்கேயே கொடுக்கப்படும் ... அவ்வங்கியின் இன்னொரு கிளை எதிர் கட்டிடத்தில் உள்ளது... ஆகவே மதியம் உணவருந்த அனைவரும் இங்கே வருவர்...

அப்போது இந்த நண்பரும் அங்கே உணவருந்தி கொண்டு இருந்தார். நான் இவர் தான என்று முதல் பார்வையிலே அனுமானித்திருந்தாலும், அவரிடம் இருந்து ஏதும் ஒப்புதல் கிடைக்காததினால் ஆழ்ந்த யோசனையில் உணவருந்தி கொண்டு இருந்தேன் ...அவர் உணவருந்தி விட்டு சென்று விட்டார்... நானும் மாடிக்கு வந்துக்கொண்டிருக்கும் போது அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார் .. இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு என் பணிக்கு திரும்பி விட்டேன் .. பின்னர் மாலையில் சிறிது நேரம் பழைய கல்லூரி மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டோம்.

நான் இருந்த அதே apartment கே  இவரும் குடிப்புகுந்தார் ... வார இறுதி நாட்களில் இவருடன் சேர்ந்து ஊர் சுற்ற கிளம்பினோம்.. பொதுவாக எல்லா ஐரோப்பா நாடுகளிலும்  walking street எனப்படும் தெருக்கள் இருக்கும் ... எப்படி என்றால் , சென்னையின் ரங்கநாதர் தெருப் போன்று.. ஆனால் ஒரே வித்தியாசம் இங்கு அவ்வளவு இட நெருக்கடியெல்லாம் இருக்காது .. நிம்மதியாக நடக்கலாம் ...


இங்கு துணிக்கடை, ஹோட்டல் , மற்றும் சில கடைகள் இருக்கும் ... இன்னொரு வித்தியாசம் ரங்கநாதர் தெருவில் விலை கொஞ்சம் மலிவாக இருக்கும், அனால் இங்கோ விலையை கேட்டால் நமக்கு தலையை சுற்றும் ...

இங்கே இந்த வேடிக்கை காண்பிப்போர், வித்தைகள் செய்வோர் என்று வார இறுதி நாட்களில் நன்றாக இருக்கும், இதே தெருவில் நம்ம ஊர் பிதாமகன் சூர்யா போன்றோரும் உண்டு ...இந்த தாயம் உருட்டுவது, இரண்டு குவளைக்குள் சிறுப் பந்தை  உருட்டுவது என்றுப் பல நடக்கும்... இவை அனைத்தும் சட்டப்படி செல்லாதது.. நம்ம ஊரை போன்று, அதாவது சட்டம் மட்டும் உண்டு இது போன்ற விஷயங்களில் ... பிதாமகன் படத்திற்கும் இந்த சம்பவத்திற்கும்   ஏறக்குறைய வித்தியாசங்கள் பெரிதாக கிடையாது ,
அங்கே லைலாவிற்குப் பதிலாக இங்கு எனது நண்பர், மதுபாலா, லொடுக்குப் பாண்டிக்குப் பதிலாக இரண்டுப்  பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ... விளையாடி முடிக்கும் வரை அவர்கள் எல்லாரும் ஒரே குழு என்பது உங்கள் மூளைக்கு உரைக்கவே உரைக்காது...

எனது நண்பரும் சும்மா இல்லாமல் இந்த கோஷ்டியில் ஆட முடிவெடுத்துவிட்டார் .. இவரோ ஊருக்கு புதிது, எங்கே என்னை கேட்டா எல்லாம் நடக்கிறது,
அவர் கூட்டத்தினுல்லே  உள்ளே புகுந்து ஆ இந்த 100 Euro இந்தக்  குப்பிக்குள் தான் இருக்கிறது என்று என்னை பார்த்து பெருமிதமாக ஒரு புன்னகையும் உதிர்த்து, குப்பியை திறந்து பார்த்தால் அதனுள்ளே ஒன்றும் இல்லை... என்ன பிதாமகன் படத்தில் லைலாவை இன்னும் காசை வெளியே எடுக்க முதலில் லைலாவை ஜெயிக்க வைப்பார், சூர்யா ... இங்கே அப்படியே தலைகீழ் ....

நான் வாயாப் போனது போகட்டும் வந்து தொலையா அப்படின்னு  இவர கூப்பிட்டால்  பக்கத்துல இருக்கிற அம்மிணி அதெல்லாம் வேண்டாம் இன்னொரு முறை விளையாடு விட்டதை பிடித்துவிடலாம் என்று கூற நாம்ம ஆள் உடனே இன்னொரு 50 euro வை எடுத்து வைத்து விட்டார்.. அங்கே வெளியே எடுத்த ரூபாயை நீங்கள் திரும்ப எடுக்கவே முடியாது... இப்போதும் பந்தை உருட்ட அதுவும் ஈ என்று இளித்தது ...

போனது 150 euro ...  நம்ம ஊர் மதிப்பில் 12000 சொச்சம்... நான் அவரை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வருவதற்குள் ... அப்பா முடியலை.... வெளியே  வந்த பின் தான், தான் இழந்தது 150 kroner illai 150 Euro என்பது அவருக்கு உரைத்தது .... அதன் பின் அவர் ஒரு வாரம் சரியாக உறங்கவில்லை தூங்கவில்லை ...

ஏமாற்றுவோர் நம்ம ஊரில் மட்டும் இல்லை உலகத்தில் எல்லா மூலைகளிலும் உள்ளனர் ...  ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்க தானே செய்வர் ...

Thursday, November 4, 2010

இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள் ....

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள் ....

நான் இந்த பதிவு எழுதும் நேரத்தில் அனைவரும் தீபாவளி கொண்டாட்டத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்
அனைவரும் தீபாவளிக்காக புது உடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் இன்னும் பல சமாச்சாரங்கள் புதிதாக வாங்கி இருப்பீர்கள்..

எனது சின்ன வயது தீபாவளிக்கும் இப்போதைய தீபாவளிக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்து விட்டன... முன்னரெல்லாம் உறவினர்கள் நமது வீட்டிற்கோ அல்லது நாம் அவர்கள் வீட்டிற்கோ செல்லும் பழக்கம் இருந்தது... இன்றோ எல்லா பண்டிகைகளும் தொ(ல்)லைக்காட்சி பெட்டியின் முன்
கழிக்கின்றோம் ...  இந்த மோகத்தில் சிறார்களை அவர்களாகவே பட்டாசு வெடிக்க அனுப்பும் பெற்றோர் இன்று இருக்கின்றனர், அவ்வாறு அவர்களை தனியாக அனுப்பாமல், சிறார்களை தங்கள் கவனத்தில் வைத்து பட்டாசை வெடிக்க கொடுங்கள்... சிறார்கள் மட்டும் அல்ல சில பெரியோர்களே  ஆர்வகோளாறு காரணகமாக பட்டாசுகளை தங்கள் கைகளில் பிடித்து எரிந்து விளையாட எத்தனிப்பவர்கள் அது மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஏன் அவர்களின் பாதுகாப்பிற்கும் கூட ஊறு விளைவிக்கும் என்பதை புரிந்துக் கொண்டு பெரியோர்கள் சிறார்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

மேலும் வெடி வெடிப்பது நமக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் வயோதிகப் பெரியவர்களுக்கு சில ஸ்ரமத்தையையும் கொடுக்கும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் ...

பண்டிகை நாம் மட்டும் சந்தோஷமாக இருப்பதற்கு அல்ல மற்றோரையும் சந்தோஷ படுத்துமாறு இருப்பது நமது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும்...

பெரியோர்களும் சிறார்களின் மன நிலையை புரிந்துக் கொண்டு நடந்க்கொள்ளுங்கள்....

மேற்கூறிய சில விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், சந்தோஷ மிகுதியில் நாம் அவற்றை கடை பிடிப்பது கிடையாது ...

எல்லோருக்கும் இந்த தீபாவளி, சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்...

Saturday, September 25, 2010

நண்பேண்டா

அனைவருக்கும் வணக்கம் ...

ரொம்ப நாளா இந்த பக்கமே வரமுடியல... வேலை பளு மற்றும் சில பல காரணங்களால தடைகள்...

நான் இப்ப பகிர்ந்துக்கொள்ள  போவது என்னோட பள்ளிகூடத்துல நடந்த ஒரு சுவாரசியமான என் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஒரு சுவையான நிகழ்ச்சி.
அப்ப நான் பதினோரம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,  காலாண்டு பரீட்சை துவங்கியாச்சு, எனக்கு ரொம்பவும்  கஷ்டமான பாடம் அப்படினா அது வேதியியல் தான்.. எனக்கு சுட்டு போட்டாலும் அதுல ஒன்னுமே மனசுல பதியவில்லை ..  சரி பரீட்சை அறைக்குள்ள வந்தாச்சு இனிமே என்னப் பண்றது அப்ப தான் என்னோட அடுத்த வரிசை எண் நண்பன் ஒரு யோசனை சொன்னான்.. அது புஸ்தகத்த பக்கத்துல வச்சுக்கிட்டு எழுதுவது 

இந்த நேரத்துல அந்த நண்பனை பற்றி நான் கட்டாயம் சொல்லியாகனும் ... அவனை பற்றிய ஒரு முன்னுரை...அவனோட பெயர்  வேண்டாமே   .. அவனுக்கு  இப்ப தான் கல்யாணமாகிருக்கு .. பாவம் அவனோட மனைவி இத படிச்சா அவனுக்கு  கஷ்டம்... :D

அவன் சொன்ன யோசனைல அவனோட சுயநலமும் என் மூலமா பண்றதுல ஒரு பாதுகாப்பும் இருந்தது...

சரி இப்ப கதைக்கு வருவோம்..... அவன் சொன்ன யோசனை புஸ்தகத்த பரீட்சை அறைக்குள்ள எடுத்துட்டு போய் எழுதுவது...  நான் அப்ப இருந்த மனநிலைல சரி பண்ணிடலாம் அப்படின்னு எடுத்துட்டும் போயாச்சு...

பரீட்சை துவங்கி நான் புஸ்தகத்த தொறந்து எழுதவும் துவங்கியாச்சு... இதுக்கு நடுல அந்த அறை  மேற்பார்வையாளர் பற்றி ஒரு சிறு குறிப்பு... அவர் ரொம்ப நல்லவர் அதனால ரொம்ப வெகுளியும் கூட .... அவர் கருத்தோட தூங்க ஆரம்பிச்சுட்டார்... அதனால எனக்கு பெருசா பயம் வரல...

நேரமாக நேரமாக அந்த நண்பனுக்கு பொறுமை இல்ல..  எங்களோட உடன்பாடு படி நான் எழுதிமுடிச்சவுடனே  நான் அவனுக்கு புஸ்தகத்தை கொடுத்துவிட வேண்டும் என்பது ... ஆனாலும் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை  என்னை நச்சரிக்க ஆரம்பிச்சுட்டான்... ... போடா தொலையுதேன்னு அவனிடம் புஸ்தகத்த கொடுத்ததும் விட்டேன்... இப்ப தான் கதைல ஒரு திருப்பம்...

என்  நண்பன் உடகார்ந்திருந்த மேஜை வெளிப்புற மேற்பார்வையாளர் ஒருவரின் கண்ணுக்கு அகப்படும் இடத்துலயும் இருந்தது ... இதை அந்த நன்ம்பான் கவனிக்க தைரியத்தின் விளைவு அவர் இதை ஜன்னல் வழியே பார்த்து எங்கள் அறைக்குள்ளே வந்து அவன் கையும் களவுமாக பிடித்து விட்டார்... இவன் சோழ பொறியில் சிக்கிய எலி மாதிரி திரு திருன்னு முழிக்க அதுக்குள்ளையும் தூங்கி கொண்டிருந்த எங்கள் ஆசிரியரும் எழுந்துவிட இவனுக்கு மண்டகப்படி ஆரம்பமானது...  ..

நான் முன்ன பயந்த படியே அவன் என் பெயரையும் போட்டு கொடுத்துவிட்டான். இத கேட்டவுடனே எனக்கு அப்டியே மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு வித நடுக்கம். இருந்தாலும் முகத்துல அத காமிச்சுக்கல ... இப்பக்கதைல இன்னுமொரு திருப்பம்... அது நானே எதிர்பாரத திருப்பம்

என்னோட பெயரை சொன்னவுடனே எங்களுடைய அறையின் ஆசிரியருக்கு இன்னும் கோபம் வந்து விட்டது ... போச்சு இன்றைக்கு நாமும் தொலைஞ்சோம் அப்டின்னு நினைக்கும் போதே அவனுக்கு பளார் பளார் அப்டின்னு இன்னும் ரெண்டு சேந்து விழுந்ததோட இல்லாம ...எனக்கு பாலாஜிய பத்தி சின்ன வயசுலருந்தே தெரியும்.... அவன் ரொம்ப நல்ல பையன் உன்ன பத்தி இந்த பள்ளிக்கூடத்துல எல்லாருக்கும்  தெரியும் நீ எவ்ளோ கேப்மாரி அப்டின்னு சொல்லி மண்டகப்படி இன்னும் தீவிரமா ஆகிடுச்சு இதுல இன்னொரு  விஷயம் இவன் புஸ்தகத்த பாத்து எழுதுறதக் கண்டுப்பிதுச்சது  அதே வேதியியல் ஆசிரியர் தான் 

இதுக்கு நடுல அந்த நண்பன் என்ன பரிதாபமா ஒரு பார்வை பாத்தான் ... எனக்கு சிரிப்ப அடக்கவும் முடியல அதே நேரத்துல இப்படி ஒரு பெரிய தவறா பண்ணிட்டோமே அப்படினும் எனக்கு ஒரே பீலிங்க்ஸ் வேற அந்த ஆசிரியர் என் மேல வச்சுருந்த அந்த ஒரு நன்மதிப்ப நான் இப்படி சீர்கொலச்சுட்டேனே அப்டின்னு எனக்கு ரோம்பாயும் மனசு கஷ்டமா போச்சு...

அன்னைக்கு வீட்டுக்கு வந்தோடனே என் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் ... எங்க அம்மாவும் ஒரு ஆசிரியை... அம்மாவும் என்கிட்டே சரி விடு ... எப்ப உனக்கே நீ செஞ்சது தப்புன்னு தோனித்தோ அப்பயே எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமே இந்த தப்ப திரும்பயும் பண்ணாத அப்டின்னு சொன்னங்க..

இத நான் பகிந்துக்கொள்வதற்கு முக்கிய காரணம் ... 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு  அந்த  நண்பன சென்ற வருடம் சந்திச்சேன் அப்ப இந்த நிகழ்ச்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது... இத அவன்கிட்ட பகிர்ந்துகும் போது அவன் டேய் இதுலாம் இன்னும் ஏன்டா ஞாபகம் வச்சு அத என்கிட்டே சொல்லி என்ன கொடும படுத்துற அப்டின்னு சொன்னான் இருந்தாலும் பசுமரத்தாணி போல் என் நினைவில் நின்ற இந்த வரலாற்று நிகழ்ச்சிய  பதிவு பண்ணி வச்சுக்க வேணாமா என்ன நீங்களே சொல்லுங்க...

Thursday, April 8, 2010

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் UIDAI யும்

அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகுக..

இது எனது முதற்பதிவு.. முதற்பதிவிலேயே கொஞ்சம் வித்தியாசமான இன்றைய நாட்டு நடப்பை பற்றிய எனது எண்ணங்களை இங்கு ஓர் தொகுப்பாக வெளியிடுகிறேன் ..

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை துவக்க அரசு ஆயுத்தமாகி கொண்டிருக்கின்ற இவ்வேளையில் நான் எனது சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன் ..

எப்போதும் இத்தகைய கணக்கெடுப்பில் நேரடியாக மக்களை எதிர்கொள்வது நம்முடைய அரசு ஊழியர்கள் தான் .. பாவம் அவர்களும் எத்துனை ஆண்டுகள் தான் இத்தகைய பணிகளை செய்வது, மேலும் அவர்களுக்கு அலுவலகத்தில் நிறைய பணிகள் இருக்கும் போது இப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும்... அவர்கள் ஒரு வேலையே உருப்படியாக செய்யட்டும் மற்ற பணிகளுக்கு நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டும்.. அவர்களின் அனுபவங்களை மட்டும் பகிர்ந்துகொண்டால் போதுமானது என்று நினைக்கிறன்..

இன்று அரசு பல திட்டங்களை கொண்டு வருகிறது.. அதில் ஒன்று ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதென்பது.. அந்த திட்டத்தை இதற்கு உபயோகப் படுத்தலாம் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சிக் கொடுத்து அரசு ஊழியர்களுக்கு என்ன ஊழியம் இப்பணிக்கு கொடுப்பார்களோ அதே ஊதியத்தை இவர்களுக்கும் கொடுக்கலாம்.. இதன் மூலம் அரசு இயந்திரத்தின் முதுகெலும்பான ஊழியர்களின் வேலையும் பாதிக்காது, வேலையற்றவர்களுக்கு ஓர் வேலை கொடுத்தது போன்றும் ஆகும்..

சொல்லப்போனால் வெட்டியாக திரிபவர்களுக்கு ஒரு முக்கியமான பணியைக்கொடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓர் பனி சுமையும் வேலையில்லா திண்டாட்டத்தை தற்காலிமாக உறங்கவைக்கவும் முடியும்....

இது ஓர் யோசனையே இதற்கு பல தடைகள் வரும்.. ஆனால் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வதென்பதை மட்டும் யோசித்து செயல் பட வேண்டும்...

இங்கும் வந்து ஜாதி மதம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற விஷயங்களை கொண்டு சேர்ப்பது நல்லதல்ல ... நாம் இங்கு தொடங்க இருப்பது நம் எதிர்கால சந்ததிகளுக்கு பல நன்மைகளை விளைவிக்க போகின்றதென்பதை மட்டும் கருத்தில் கொண்டு ... இளைஞர்களை
TASMAC இல் உட்கார வைக்காமல் மக்களுக்கு அவர்களின் உண்மையான தேசப்பற்றையும் கடமையுணர்ச்சியும் வெளிப்படுத்தும் விதமாக செய்யலாம் ...

வெறுமனே வோட்டுக்காக தொலைக்காட்சி பெட்டியையும் இலவசங்களையும் கொடுக்காமல் அவர்களுக்கு உழைக்க வாய்ப்பளிக்கலாம் .... அதற்கு செலவழிகின்ற தொகையை இதற்கு கொடுத்தாலும் மக்கள் அவர்களை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள்..... நான் வெறுமனே மாநில அரசையோ இல்லை மத்திய அரசையோ குற்றம் சாட்ட வேண்டும் என்பதனால் இதை குறிப்பிடவில்லை எமது நோக்கமெல்லாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதும் தன்னுடைய தனித்துவத்தை எதிர்காலத்தில் விட்டுவிடாமல் இருக்க வேண்டியும் மட்டுமே மேற்கொண்ட எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டேன்...

அடுத்த பதிவில் UIDAI பற்றி பேசலாம்

ஆரோக்கியமான வாதங்களும், விவாதங்களும், கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன...

தங்களின் பின்னூட்டம் எனது புத்துணர்ச்சி..