Thursday, April 8, 2010

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் UIDAI யும்

அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகுக..

இது எனது முதற்பதிவு.. முதற்பதிவிலேயே கொஞ்சம் வித்தியாசமான இன்றைய நாட்டு நடப்பை பற்றிய எனது எண்ணங்களை இங்கு ஓர் தொகுப்பாக வெளியிடுகிறேன் ..

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை துவக்க அரசு ஆயுத்தமாகி கொண்டிருக்கின்ற இவ்வேளையில் நான் எனது சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன் ..

எப்போதும் இத்தகைய கணக்கெடுப்பில் நேரடியாக மக்களை எதிர்கொள்வது நம்முடைய அரசு ஊழியர்கள் தான் .. பாவம் அவர்களும் எத்துனை ஆண்டுகள் தான் இத்தகைய பணிகளை செய்வது, மேலும் அவர்களுக்கு அலுவலகத்தில் நிறைய பணிகள் இருக்கும் போது இப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும்... அவர்கள் ஒரு வேலையே உருப்படியாக செய்யட்டும் மற்ற பணிகளுக்கு நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டும்.. அவர்களின் அனுபவங்களை மட்டும் பகிர்ந்துகொண்டால் போதுமானது என்று நினைக்கிறன்..

இன்று அரசு பல திட்டங்களை கொண்டு வருகிறது.. அதில் ஒன்று ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதென்பது.. அந்த திட்டத்தை இதற்கு உபயோகப் படுத்தலாம் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சிக் கொடுத்து அரசு ஊழியர்களுக்கு என்ன ஊழியம் இப்பணிக்கு கொடுப்பார்களோ அதே ஊதியத்தை இவர்களுக்கும் கொடுக்கலாம்.. இதன் மூலம் அரசு இயந்திரத்தின் முதுகெலும்பான ஊழியர்களின் வேலையும் பாதிக்காது, வேலையற்றவர்களுக்கு ஓர் வேலை கொடுத்தது போன்றும் ஆகும்..

சொல்லப்போனால் வெட்டியாக திரிபவர்களுக்கு ஒரு முக்கியமான பணியைக்கொடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓர் பனி சுமையும் வேலையில்லா திண்டாட்டத்தை தற்காலிமாக உறங்கவைக்கவும் முடியும்....

இது ஓர் யோசனையே இதற்கு பல தடைகள் வரும்.. ஆனால் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வதென்பதை மட்டும் யோசித்து செயல் பட வேண்டும்...

இங்கும் வந்து ஜாதி மதம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற விஷயங்களை கொண்டு சேர்ப்பது நல்லதல்ல ... நாம் இங்கு தொடங்க இருப்பது நம் எதிர்கால சந்ததிகளுக்கு பல நன்மைகளை விளைவிக்க போகின்றதென்பதை மட்டும் கருத்தில் கொண்டு ... இளைஞர்களை
TASMAC இல் உட்கார வைக்காமல் மக்களுக்கு அவர்களின் உண்மையான தேசப்பற்றையும் கடமையுணர்ச்சியும் வெளிப்படுத்தும் விதமாக செய்யலாம் ...

வெறுமனே வோட்டுக்காக தொலைக்காட்சி பெட்டியையும் இலவசங்களையும் கொடுக்காமல் அவர்களுக்கு உழைக்க வாய்ப்பளிக்கலாம் .... அதற்கு செலவழிகின்ற தொகையை இதற்கு கொடுத்தாலும் மக்கள் அவர்களை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள்..... நான் வெறுமனே மாநில அரசையோ இல்லை மத்திய அரசையோ குற்றம் சாட்ட வேண்டும் என்பதனால் இதை குறிப்பிடவில்லை எமது நோக்கமெல்லாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதும் தன்னுடைய தனித்துவத்தை எதிர்காலத்தில் விட்டுவிடாமல் இருக்க வேண்டியும் மட்டுமே மேற்கொண்ட எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டேன்...

அடுத்த பதிவில் UIDAI பற்றி பேசலாம்

ஆரோக்கியமான வாதங்களும், விவாதங்களும், கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன...

தங்களின் பின்னூட்டம் எனது புத்துணர்ச்சி..